துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

தா்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் துணை ராணுவப்படையினா் அணிவகுப்பு நடந்தது.

Update: 2021-03-02 19:52 GMT
மயிலாடுதுறை:
தா்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் துணை ராணுவப்படையினா் அணிவகுப்பு நடந்தது.
துைண ராணுவ படையினா்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்)் 6-ந் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 அதன்படி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் நேற்று தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசாரின்  அணிவகுப்பு நடந்தது. 
அணி வகுத்து சன்றனா்
இந்த அணிவகுப்பு மாப்படுகை ரெயில்வே கேட் அருகில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் தொடங்கியது. அணிவகுப்பில் 60 துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படை போலீசார் உள்பட 110 பேர் பங்கேற்று சாலையில் அணிவகுத்து சென்றனர். 
இந்த அணிவகுப்பு பூம்புகார்- கல்லணை சாலையில் சோழம்பேட்டை வரை சென்றது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், உதவி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், மகாதேவன் ஆகியோரும் இந்த அணிவகுப்பை வழிநடத்தி ன்றனர்.

மேலும் செய்திகள்