மூதாட்டி பலி

மூதாட்டி பலி

Update: 2021-03-02 19:27 GMT
விருதுநகர்,
விருதுநகர் சத்தியமூர்த்தி சாலையை சேர்ந்தவர் பத்ரகாளி (வயது 67). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக இந்நகர் முத்தம்மாள் சாலையை சேர்ந்த கதிரவன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் பத்ரகாளி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி பத்ரகாளியின் மகன் நடராஜன் (43) கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்