மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

தோகைமலை அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-03-02 19:02 GMT
தோகைமலை
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பசுபதிபாளையம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சத்யா (வயது 40). இவர் பி.உடையாப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து சத்யா தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சத்யா தனது  ஸ்கூட்டரில் சுக்காம்பட்டி-காணியாளம்பட்டி மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால், ஹெல்மெட் அணிந்தபடி வந்த ஒருவர் சத்யாவை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு வேகமாக சென்று விட்டார்.
கணவர் கைது
 இதில் படுகாயம் அடைந்த அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தோைகமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் ஆகியோர் சத்யாவின் கணவர் சதீஷ்குமாரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை அவர் தான் அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது. அதன்பேரில், சதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்