முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் தென்னிந்திய அளவிலான ஆப்பநாடு விளையாட்டுக் கழகம் நடத்தும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கோப்பைக்கான கபடி போட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியை முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ராமேசுவரம் அ.தி.மு.க. நகர செயலாளர் அர்ஜுனன், வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தூவல் ராமசாமி, பா.ஜ.க. மாநில மருத்துவர் அணி செயலாளர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கராத்தே பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் வெற்றி முருகன் ஆகியோர் செய்திருந்தனர். போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்ற சென்னை அணியினருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் கோப்பையை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.