வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
ராமநாதபுரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ளது.வேட்பு மனு தாக்கல் இந்த மாதம் 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, பிழை திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம்-8 மற்றும் அதே தொகுதிக்குள் இடம் மாறியவர்கள் படிவம் 8 யு ஆகியவற்றை வரும் 9-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், உதவி அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் இைணத்து வழங்கலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.