நாட்டறம்பள்ளி அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

நாட்டறம்பள்ளி அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-02 18:07 GMT
நாட்டறம்பள்ளி,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நாட்டறம்பள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கார் டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த இலியாஸ் (வயது 31), மன்சூர் (37) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்தியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து, காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்