திருப்பத்தூர் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் அந்தரநாச்சி அம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து கிராம மக்கள் 8 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். பின்னர் கோவிலை சுற்றி தென்னை மர ஓலையால் கட்டினர். இந்த நிைலயில் நேற்று சாமியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் அருள்வாக்கு கூறுபவர் சாமி ஆடியப்படி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாங்குடி திருவுடையார்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.