கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-03-02 17:02 GMT
கோவில்பட்டி:

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.
 
அங்கு நடந்த பூஜையின் போது கடந்த 10 ஆண்டுகளாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பூத் லிஸ்ட் ஆகியவற்றை வைத்து வணங்கினார். 

தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, 10 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் துரைச்சாமிபுரம், சி.ஆர். காலனி, கரடிகுளம் பகுதிகளில் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். 

அமைச்சருடன் கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்