தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-02 16:51 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனை

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

கலெக்டர் ஆய்வு

அப்போது அந்த வழியாக வந்த கார்கள் உள்பட வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் கொண்டு செல்கிறார்களா? அல்லது பரிசுப் பொருட்கள் உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை தீவிரமாக சோதனை செய்தனர்.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்