மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.;

Update: 2021-03-02 15:52 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி மகன் நாராயணசாமி (வயது 47) விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து தும்பை கிராமத்தில் உள்ள  விவசாய நிலத்திற்கு புறப்பட்டார்.  செம்பாச்சி பயணிகள் நிழற்குடை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், நாராயணசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நாராயணசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  நேற்று முன்தினம்  நாராயணசாமி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்