16 பவுன் நகை திருட்டு

16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்

Update: 2021-03-02 15:50 GMT
மதுரை, 
மதுரை திருப்பாலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்கான். இவரது மனைவி ரூபினா (வயது 27). சம்பவத்தன்று கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் வீட்டிற்கு வந்த போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து தனது கணவருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் திருப்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 16 பவுன் நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்