அரசு மருத்துவமனையில் கம்ப்யூட்டர் பழுதால் வெளிப்புற சிகிச்சை நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் கம்ப்யூட்டர் பழுதால் வெளிப்புற சிகிச்சை நோயாளிகள் அவதிப்பட்டனர்.

Update: 2021-03-02 06:36 GMT
புதுச்சேரி, 

புதுவை சட்டசபை அருகே உள்ள      அரசு    மருத்துவ மனைக்கு பல்வேறு பகுதியில் இருந்து        நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள்   வெளிப்பு ற சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக அவர்கள் வெளிப்புற சிகிச்சை பிரிவில் பெயர்களை பதிவு செய்து சீட்டு பெற்று      சிகிச்சை பெறுவார்கள். 

நோயாளிகளின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சீட்டு வழங்கப்படும். நேற்று காலை கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

நோயாளிகள் அவதி

இதனால் நோயாளிகள் நீண்ட நேரம்  வரிசையில் காத்திருக்க       வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர்கள், குழந்தைகள் அவதிப்பட்டனர்.   மருத்துவமனையில்    சிகிச்சைபெற்று வேலைக்கு   செல்லலாம் என்று வந்தவர்களும் தவித்தனர். வெகு நேரத்துக்கு பின்னரே கம்ப்யூட்டர் பழுது சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு நோயாளிகள் சீட்டு பெற்று சிகிச்சை பெற்றனர். கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுதால் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்