கோபி அருகே நடந்த வாகன சோதனையில் 131 மதுபாட்டில்கள் பறிமுதல்

வாகன சோதனையில் 131 மதுபாட்டில்கள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-03-02 00:44 GMT
கடத்தூர்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனை நடைபெற்று வருகிறது.  இந்தநிலையில் கோபி பறக்கும் படையை சேர்ந்த வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு கெட்டிச்செவியூரில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது தண்ணீர்பந்தல் பாளைத்திலிருந்து கோபி நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்போது காருக்குள் 131 மதுபாட்டில்கள் இருந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் காருடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்கள். அதன்பின்னர் காரை சிறுவலூர் போலீசில் ஒப்படைத்தார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தேவகோட்டையை சேர்ந்த சசிவர்ணம் என்பவரை கைது செய்தார்கள்.

மேலும் செய்திகள்