சேலத்தில் ஓய்வு பெற்ற கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் ஓய்வு பெற்ற கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-03-01 22:27 GMT
சேலம்:
சேலத்தில் ஓய்வு பெற்ற கிராம வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம வங்கி ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை வங்கி நிர்வாகமே செலுத்த வேண்டும், 22 குடும்பங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் புளுகாண்டி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கிருஷ்ணன், உதவி தலைவர் சோலை மாணிக்கம் உள்பட ஓய்வு பெற்ற கிராம வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 
கோஷம்
பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்