குறை தீ்ர்க்கும் கூட்டம் ரத்து; பெட்டியில் புகார் மனுக்களை போட்டுச் சென்ற பொதுமக்கள்
நெல்லையில் மக்கள் குறை தீர்க்கும் ரத்து செய்யப்பட்டதால், பெட்டியில் புகார் மனுக்களை பொதுமக்கள் போட்டுச் சென்றனர்.
நெல்லை, மார்ச்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அம்மா திட்ட முகாம் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட விவரம் தெரியாமல் வெளியூர்களில் இருந்து ஏராளமான கிராம மக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது புகார் மனுக்களை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச் சென்றனர்.