நெல்லை போலீஸ் சூப்பிரண்டுடன், துணை ராணுவப்படை அதிகாரி சந்திப்பு
நெல்லை போலீஸ் சூப்பிரண்டுடன், துணை ராணுவப்படை அதிகாரி சந்தித்தார்.
நெல்லை, மார்ச்:
நெல்லை மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒரு உதவி தளவாய், ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 84 மத்திய துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து அவர்கள் பஸ் மூலம் நெல்லை மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை, உதவி தளவாய் நரேந்திரன் நேரில் சந்தித்தார். அப்போது மாவட்ட தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவருக்கு, நெல்லை போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனைகளை வழங்கினார்.