பொன்மலை பணிமனை உற்பத்தி இலக்கை எட்டி சாதனை

பொன்மலைப்பட்டி
திருச்சி பொன்மலை பணிமனையில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு மற்றும் ரெயில் பெட்டிகள் உற்பத்தி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா முடக்கம் காரணமான இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. இதை ஈடு செய்வதற்காக ஜூலை மாதத்திலிருந்து பணிமனையில் பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்மூலம், இந்த நிதி ஆண்டிற்குள் ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த இலக்குகளை எட்டி சாதனை படைத்துள்ளது. இது, பாராட்டத்தக்க முயற்சி ஆகும். இந்த பணிமனை யுனெஸ்கோ புகழ் நீலகிரி மலை ரயில் என்ஜின்களை எக்ஸ்-கிளாஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான பெரும்பாலான முக்கிய பாகங்கள் தயாரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நீராவி என்ஜின் பணிகள் நிறைவடைந்து விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.