உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ராஜவீதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், சென்னையை சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் உழவாரப்பணி செய்தனர். இப்பணியில் 70 அடியார்கள் பங்கேற்றனர். கோவில் பிரகார மண்டபங்கள், கோபுரங்கள், மதில் சுவர்கள் ஆகியவற்றில் வளர்ந்திருந்த செடிகளை வெட்டுவது, கோவிலுக்கு உள்ளே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வது, பூஜைக்கான பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணியை செய்தனர். அவர்களுக்கு ஜமீன் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவி செய்தனர்.