காளையார்கோவில் அருகே உள்ள புலிக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 54). தொழிலாளி. இவர் இளையான்குடியில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். மேட்டு சாத்தமங்கலம் அருகே வந்த போது எதிரே வந்த பொன்னியேந்தல் கிராமத்தை சேர்ந்த அபிமன்யு(20) மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் பாண்டியன் பலியானார். அபிமன்யு, அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த அவரது தந்தை சேகர்(48) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.