கரூர் வந்த விழிப்புணர்வு யாத்திரை குழுவினர் பெங்களூரு புறப்பட்டது

கரூர் வந்த விழிப்புணர்வு யாத்திரை குழுவினர் பெங்களூரு புறப்பட்டது

Update: 2021-03-01 18:35 GMT
கரூர்
கும்ப சந்தேஷ் யாத்ரா குழு சார்பில் இந்திய கலாசாரம், ஒற்றுமை, சுற்றுச்சூழல், மறுகட்டமைப்பை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையானது கடந்த மாதம் 19-ந்தேதி விஜயவாடாவில் தொடங்கி வருகிற 31-ந்தேதி ஹரித்துவாரில் முடிவடைகிறது. இதில் யாத்திரை குழு தேசிய தலைவர் சீனிவாசரெட்டி தலைமையில் 20 பேர் பங்கேற்று உள்ளனர். இந்த யாத்திரை குழு நேற்றுமுன்தினம் கரூர் வந்தடைந்தது. அவர்களை கிராமியம் இயக்குனர் நாராயணன் வரவேற்றார். நேற்று கும்ப சந்தேஷ் யாத்ரா குழு சார்பில் கரூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து யாத்திரை குழு கரூரில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்