பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

Update: 2021-03-01 18:35 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது தச்சு தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார். மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தச்சு தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தோக்கவாடி நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 35). தச்சு தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பிரகதி ராஜ் (20). சென்ட்ரிங் தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். 2 பேருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.
ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் வெளியில் வர முடியாமல் வீரமணி, பிரகதிராஜ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆற்றில் குளி்த்தவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் காவிரி ஆற்று பகுதிக்கு வந்தனர். மேலும் வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் காவிரி ஆற்றுக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தேடினர்.
தேடும் பணி தீவிரம்
நேற்று முன்திம் இரவு வரை தேடியும் கிடைக்காததால் 2 பேரையும் தேடும் பணி நேற்றும் தொடர்ந்தது. இதையடுத்து நேற்று மாலை வீரமணியின் உடலை பிணமாக தீயணைப்பு படையினர் மீட்டனர். பிரகதிராஜை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மீட்கப்பட்ட வீரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி இறந்த வீரமணிக்கு சுதா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.   
=======

மேலும் செய்திகள்