குளமங்கலம் அய்யனார் கோவில் தெப்ப உற்சவம்

குளமங்கலம் அய்யனார் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2021-03-01 18:34 GMT
கீரமங்கலம், மார்ச்.2-
கீரமங்கலம் அருகே குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமகத் திருவிழா 3 நாட்கள் நடந்தது. விழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு ஏராளமான காகிதப்பூ மாலைகள் அணிவிக்கப்பட்டன. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே உள்ள பெரிய குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு  இருந்தது. தொடர்ந்து சுவாமிகள் அலங்காரத்துடன் அமர வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் தெப்பம் இழுக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்