சிலம்பம் போட்டியில் கரூர் மாவட்ட மாணவர்கள் சாதனை
சிலம்பம் போட்டியில் கரூர் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
நொய்யல்
உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 9 பிரிவாக தனித்தனியாக நடந்தது. இதில், கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியை சேர்ந்த சிலம்ப மாஸ்டர் பிரியதர்ஷினி தலைமையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், மாணவர்கள் பிரவீன், வைசாலி, ரித்தீஷ், ஸ்ரீஹரி, லஷ்னா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்களை கிராமமக்கள் வெகுவாக பாராட்டினர்.