அவினாசி,மங்கலத்தில் வீடுகளுக்கு புகுந்த 2 பாம்பு பிடிப்பட்டன

அவினாசிமங்கலத்தில் வீடுகளுக்கு புகுந்த 2 பாம்பு பிடிப்பட்டன

Update: 2021-03-01 18:27 GMT
அவினாசி:-
அவினாசி மங்கலம் ரோட்டில் வசிப்பவர் பிரகாஷ் (வயது 48) இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இந்த நிலையில் நேற்றுமாலை இவரது வீட்டில் வாசிங்மெசின்  அருகே பாம்பு ஒன்று படுத்து கிடந்தது. உடனடியாக அவினாசியில் உள்ள பாம்பு பிடிக்கும் வீரர் விஜயனுக்கு தகவல் தரப்பட்டது. விஜயன் அங்கிருந்த 3 அடி நீளமுள்ள நாகபாம்பை லாவகமாக பிடித்தார். இதேபோல் மங்கலம் ரோட்டில் ஒரு அடுக்குமாடி வீட்டின் மாடிப்படி அருகில் இருந்த மற்றொரு நாகபாம்பையும் பிடித்தார். அவைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்ததாக விஜயன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்