தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகை
கடன் வழங்கவில்லை என கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
மன்னார்குடி:
கடன் வழங்கவில்லை என கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்டனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மூலம் மேலவாசல், இடையர்எம்பேத்தி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 9 மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் உதவி பெற்று வருகின்றனர். இவர்களில் 6 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும், 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கபடவில்லை என கூறி அந்த மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மேலவாசல் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கடன் வழங்க நடவடிக்கை
தகவல் அறிந்ததும் கூட்டுறவு துறை அதிகாரிகள் சம்பவ இ்டத்திற்கு வந்து முற்றுகையிட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் விடுபட்ட மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.