ஜோலார்பேட்டை அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு
ஜோலார்பேட்டை அருகே தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு
ஜோலார்பேட்டை
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தற்ேபாது ேதர்தல் நடத்தை விதிமுைறகள் அமலில் உள்ளது. ஜோலார்பேட்டைைய அடுத்த தாமலேரிமுத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பா.ம.க. மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமையில் பா.ம.க.வினர் மாம்பழ சின்னம் அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் தோரணம் கட்டி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ெசயல்பட்டு, அரசு அறிவித்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்கும் வகையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி, பா.ம.க. மாவட்ட செயலாளர் கிருபாகரன் உள்பட கட்சியினர் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.