மதுரையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா

மதுரையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது;

Update: 2021-03-01 17:32 GMT
மதுரை, 
மதுரையில் நேற்று புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 8 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 249 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 7 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 51 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்