வேலூர் சரகத்தில் 34 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

வேலூர் சரகத்தில் 34 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

Update: 2021-03-01 16:55 GMT
வேலூர்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசு அதிகாரிகள், போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி வேலூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரியும் 34 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த 13 பேர் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்த 4 பேர் திருப்பத்தூர் மாவட்டத்துக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்த 8 பேர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்த 9 பேர் வேலூர் மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்