அய்யா வைகுண்டர் அவதார தினம்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை கலெக்டர் செந்தில்ராஜ் அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Update: 2021-03-01 16:55 GMT
தூத்துக்குடி:
அய்யா வைவகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அவதார தினம்

அய்யா வைகுண்டர் அவதார தினம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை மறுநாள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

ஆனால் அன்றைய தினம் அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது.

13-ந் தேதி வேலை நாள்

இதுசெலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல. மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்