போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை மாற்ற முயன்ற நைஜீரிய வியாபாரி கைது

போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை மாற்ற முயன்ற நைஜீரிய வியாபாரி கைது;

Update: 2021-03-01 16:54 GMT
கோவை

நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் நாதன் இட்சகு (வயது 41). இவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று அமெரிக்க டாலர் நோட்டுகளை கொடுத்து இந்திய ரூபாய் கொடுக்குமாறு கேட்டார். 

அங்கு வேலையில் இருந்த பாலச்சந்திரன் என்பவர் டாலர் நோட்டுகளை பார்த்த போது அது போலியானது என்பதை கண்டறிந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் விரைந்து வந்து நாதன் இட்சகுவை பிடித்து விசாரித்தனர். 

மேலும் அவரிடமிருந்த போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியா சென்றுவிட்டு 

கோவை வந்ததாகவும், தன்னிடம் இருந்தது போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் என்று தெரியாதும் என்றும் கூறி உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து நாதன் இட்சகுவை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்