தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை

ஆண்டிப்பட்டி கணவாய் பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-01 16:49 GMT
ஆண்டிப்பட்டி:

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. 

இதனையடுத்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான முன்ேனற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் போலீசாருடன் இணைந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேனி-மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அதில் வேறு மாவட்டங்களில் இருந்து பணம் மற்றும் பரிசுபொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்