திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நேற்று ஶ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் நடத்தி வைத்தார். இதில் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.