தூத்துக்குடியில் ஆசிட் குடித்த தொழிலாளி சாவு

தூத்துக்குடியில் குளிர்பானம் என நினைத்து ஆசிட் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2021-03-01 21:44 IST
தூத்துக்குடி:

தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 49). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு நகைக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

கடந்த 27-ந் தேதி கடையில் இருந்த ஒரு பாட்டிலில் ஆசிட் வைத்து இருந்தார்களாம். அதனை வரதராஜன் குளிர்பானம் என்று நினைத்து, தவறுதலாக குடித்து விட்டதாக கூறப்படுகிறது. 

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட வரதராஜன் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்