தியாகராயநகரில் கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2021-03-01 12:21 GMT
அப்போது தியாகராயநகர் ராஜா பாதர் தெருவில் கையில் பையுடன் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

அதில் 3 கிலோ 700 கிராம் எடைகொண்ட கஞ்சா பொட்டலம் இருந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் ரெட்டி (வயது 21), சயிலேஷ் ராயல் (21), வெங்கட நாகேந்திரபாபு (21) என்பதும், சென்னையில் தங்கி கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்