உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் 8-ந்தேதி நடக்கிறது
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் 8-ந்தேதி நடக்கிறது
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம்
8-ந்தேதி நடக்கிறது
திருச்சி,
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் தெப்ப உற்சவம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.
கமலவல்லி நாச்சியார் கோவில்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 7-ந்தேதி வரை தினமும் மாலை 6.15 மணிக்கு தாயார் புறப்பட்டு தெப்ப மண்டபத்தை 6.30 மணிக்கு வந்தடைகிறார்.
இரவு 8.15 மணிக்கு பொதுஜன சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
தெப்ப உற்சவம்
வருகிற 8-ந்தேதி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார், 5.15 மணிக்கு தெப்ப மண்டபத்திற்கு வருகிறார். 6.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.
இரவு 8 மணிக்கு தெப்பமண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி உலா வருகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
பந்தக்காட்சி
வருகிற 9-ந்தேதி பந்தக்காட்சி நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் தாயார் மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருள்கிறார். 5 மணி முதல் 6.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார்.
இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில்இருந்து பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.