செங்கோட்டையில் இரங்கல் கூட்டம்

தா.பாண்டியன் மறைவையொட்டி செங்கோட்டையில் இரங்கல் கூட்டம் நடந்தது.

Update: 2021-02-28 21:06 GMT
செங்கோட்டை, மார்ச்:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு அனைத்து கட்சியின் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட துணை தலைவா் சாமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளா் மாரியப்பன், உதவி செயலாளா்கள் சுந்தர், பழனி, நகர செயலாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளா் வேலுமயில் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தா.பாண்டியன் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சி.பி.ஐ. நகர உதவி செயலாளா் ஆழ்வார், ஏ.ஐ.டி.யு.சி. ராஜாமணி, அ.தி.மு.க. நகர அவைத்தலைவா் தங்கவேலு, தி.மு.க. தலைமை கழக பேச்சாளா் குத்தாலிங்கம், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவா் ராமர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளா் டேனி அருள்சிங் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் செய்திகள்