தையல் கலைஞர்கள் மாநாடு

சுரண்டையில் தையல் கலைஞர்கள் மாநாடு நடந்தது.

Update: 2021-02-28 20:59 GMT
வாசுதேவநல்லூர், மார்ச்:
தமிழ்நாடு தையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்க தென்காசி, நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு, சுரண்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகேசன், காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவனைந்த பெருமாள் வரவேற்றார். தி.மு.க. மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தையல் கலைஞர் உறுப்பினர்கள் சங்கிலி, கோபால் ராமகிருஷ்ணன், முருகானந்தம், முருகன், நவீன பெருமாள், ஆறுமுகம், முருகையா அப்துல் ரகுமான, குருநாதன், தே.மு.தி.க. மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் கோதை மாரியப்பன், பொதுச்செயலாளர் தேவராஜ், நெல்லை மாவட்ட தலைவர் ஆண்டனி சசி, மாநில பொருளாளர், லவ்லி பாலகிருஷ்ணன், நகர வர்த்தக சங்க தலைவர் காமராஜ், சேனைத்தலைவர் சமுதாய தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்