பகவதிஅம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

தொட்டியம் அருகே பாலசமுத்திரம் பகவதிஅம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.

Update: 2021-02-28 20:57 GMT
தொட்டியம், 
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகவதிஅம்மன் கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் அலகு குத்தியும் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்தும் பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கிறார்கள். நாளை கிடாவெட்டும், அதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

மேலும் செய்திகள்