தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு கூட்டம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில செயற்குழு கூட்டம்
திருச்சி,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சாரதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முல்லை கே.எத்திராஜ், இளைஞரணி தலைவர் சுதர்சன்துரை, மகளிரணி செயலாளர் ரதிதேவி, மாநகர தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 வழி விரைவுச்சாலை உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களுக்காக விவசாய நிலம் கையகப்படுத்துவது கண்டனத்துக்குரியது. ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலில் மத்திய-மாநில அரசுகளை தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும்.
உடனடியாக பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.