வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). முன்னாள் ராணுவ வீரர். இவர் கோட்டையூர் பகுதியில் புதிதாக பஞ்சர் கடை தொடங்குவதற்காக எந்திரங்களை வாங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை எந்திரங்களை கடையில் சோதனை செய்தபோது புதிதாக வாங்கிய ஏர்டேங்க் திடீரென வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.