முத்தையா சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்

முத்தையா சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2021-02-28 17:13 GMT
அரிமளம்:
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியம், ஏம்பல் கிராமத்தில் முத்தையா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 
பெரியமாடு பிரிவில் முதல்பரிசை பொன்பேத்தி மாட்டு வண்டியும், 2-ம் பரிசை நகரம்பட்டி மாட்டு வண்டியும், 3-ம் பரிசை மலம்பட்டி மாட்டு வண்டியும் பெற்றன. நடுமாடு பிரிவில் முதலாவது பரிசை மதுரை ஆட்டுக்குலம் மாட்டு வண்டியும், 2-ம் பரிசை பொன்பேத்தி வெள்ளாளத்தேவர் மாட்டு வண்டியும், 3-ம் பரிசை அம்மன்பேட்டை மாட்டு வண்டியும் பெற்றன.
சின்ன மாடு பிரிவு 
சின்னமாடு பிரிவில் முதல் பரிசை ஆட்டுக்குலம் மாட்டு வண்டியும், 2-வது பரிசை நாட்டரசன் கோட்டை மாட்டு வண்டியும், 3-ம் பரிசை புதுப்பாண்டியபுரம் மாட்டு வண்டியும் பெற்றன. பந்தயத்திற்கான ஏற்பாடுகளை ஏம்பல் நாட்டு இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் செய்து இருந்தனர். பந்தயத்தை காண சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்