அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் சப்-கலெக்டரிடம் மனு
அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் சப்கலெக்டரிடம் மனு;
தாராபுரம்:-
தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய கிளை மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமாரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தாராபுரத்தில் போக்குவரத்து பணிமனை மேலாளர் வேலுசாமி தேர்தல் விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருகிறார்.புதிய பயிற்சி இல்லாத ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் தற்போது கிளை மேலாளர் நியமனம் செய்யப்பட்டு, அதன் மூலம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தேதி அறிவித்த பின்பு தாராபுரம் கிளையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைவரையும் உடனே பணிநீக்கம் செய்து, பணி வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் புதிய பணியாளர்களை நியமனம் செய்தால், தேர்தல் நடத்தை விதி மீறிய புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அதில் கூறி இருந்தனர்.பின்னர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.