பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருட்டு

பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-02-28 16:01 GMT
மதுரை, 
மதுரை திருப்பாலை பொன்விழா நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேலன்(வயது 25). இவர் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 10 பவுன் நகை, ஒரு வைர டாலர், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து சக்திவேலன் கொடுத்த புகாரின் பேரில். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் அதே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கண்ணனேந்தல் மெயின் ரோடு கோகுல்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பழனிவேலு(71). இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தங்களது முதல்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்