திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

Update: 2021-02-28 11:38 GMT
சென்னை,

தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது.  தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் கட்சிகளுடனான கூட்டணி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் இறங்கி உள்ளன.

இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. அதில் 56 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

அதன்விவரம்:-

காங்கிரஸ்க்கு -25 இடங்கள், கம்யூ.-7 இடங்கள், மார்க்சிஸ்ட்-7, மதிமுக-5, விசிக-5 இடங்கள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொ.ம.தே.க-2 தமிழக வாழ்வுரிமை - 1 என இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  திமுக 178 இடங்களில் நேரடியாக போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்