செங்கல்பட்டு பகுதியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் கடும் அவதி

‘மாசி பனி மாடியை துளைக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் சில மாவட்டங்களில் அதிகாலையில் பனி படர்ந்து குளிர் பொதுமக்களை வாட்டி எடுக்கிறது.

Update: 2021-02-28 06:09 GMT
செங்கல்பட்டு, 

‘மாசி பனி மாடியை துளைக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழகத்தில் சில மாவட்டங்களில் அதிகாலையில் பனி படர்ந்து குளிர் பொதுமக்களை வாட்டி எடுக்கிறது. அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகாலை வேளையில் பொழியும் கடும் பனி பொழிவையொட்டி ஊட்டி, கொடைக்கானலை போல் இப்பகுதி சாலைகள் பனிபோர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன.

சாலை முழுவதும் முழுமையாக சூழ்ந்துள்ள பனிப் பொழிவினால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் ஏற்படும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினர்.

இதன் காரணமாக செங்கல்பட்டு புறவழிசாலையில் சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டாவாரே சென்றன.

காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் இந்த பனிப்பொழிவினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினர். இதே போல் சிங்கப் பெருமாள் கோயில். ஆப்பூர், அஞ்சூர். அனுமந்தை, செட்டி புண்ணியம், புலிப்பாக்கம், ஆத்தூர், வில்லியம்பாக்கம். பாலூர், வடகால், வீராபுரம், குண்ணவாக்கம், கொளத்தூர், வெங்கிடாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டன.

மேலும் செய்திகள்