சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-28 00:05 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனப்பபுரம் 1-ம் தெரு, வடகாசி அம்மன் கோவில் 1-ம் தெரு ஆகிய பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், சாக்கடைநீர் கலந்த குடிநீர் குடத்துடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நகராட்சி நிர்வாகத்தினர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்