சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கெங்கவல்லி (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோ் பாதுகாப்பு அலுவலர் அமுதன், ஆத்தூர் (தனி) தொகுதிக்கு ஆத்தூர் உதவி கலெக்டர் எம். துரை, ஏற்காடு (தனி) தொகுதிக்கு தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) கோவிந்தன், ஓமலூர் தொகுதிக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதா பிரியா, மேட்டூர் தொகுதிக்கு மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், எடப்பாடி தொகுதிக்கு உதவி ஆணையர் (கலால்) தனலிங்கம், சங்ககிரி தொகுதிக்கு சங்ககிரி உதவி கலெக்டர் வேடியப்பன், சேலம் மேற்கு தொகுதிக்கு சேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சத்திய பால கங்காதரன், சேலம் வடக்கு தொகுதிக்கு சேலம் உதவி கலெக்டர் மாறன், சேலம் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், வீரபாண்டி தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் அந்தந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புகார் தெரிவிக்கலாம். தேர்தல் முடியும் வரை அதிகாரிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் தேர்தலை நடத்துவதுடன், கண்காணிப்பு பணியையும் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.