கொங்கணாபுரத்தில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.;
எடப்பாடி:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் கொங்கணாபுரம் பருத்தி ஏல மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்றனர். மொத்தம் 8 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ.2 கோடியே 30 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதில் டி.டி.எச். ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் (100 கிலோ) ரூ.8 ஆயிரத்து 250 முதல் ரூ.9 ஆயிரத்து 919 வரை ஏலம் போனது. பி.டி. ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 850 முதல் ரூ.8 ஆயிரத்து 32 வரை ஏலம் போனது.