விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

Update: 2021-02-27 19:51 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் மின்னணு மூலம் தரம் பிரித்தல் குறித்து விவசாயிகளுக்கு வெம்பக்கோட்டை வேளாண்மை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு விருதுநகர் வேளாண் அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கினார்.  வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துசெல்வி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் ஒழுங்கு விற்பனை கோட்ட கண்காணிப்பாளர் சவுரிபாண்டியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரிராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்