நொய்யல்
நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாலாலய விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி, நவக்கிரகம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் யாகசாலை பூஜை நடந்து முடிந்து, அம்மனுக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை யாகசாலை பூஜைகள நடைபெற்றது. பின்னர் பாலாலயம் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.